அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் 7 ஆண்டு சிறை தண்டனை

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை செயலர் அஜய் பல்லா எழுதிய கடிதத்தில், `அத்தியாவசியப் பொருட்களை பதுக்குபவர்கள், கள்ளச் சந்தையில் விற்பவர்கள், அதிக விலைக்கு விற்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் மாநில அரசுகள் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு காலத்திலும் உணவு, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி, போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு நியாயமான விலையில் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதிபடுத்த வேண்டும். சந்தையில் தேவையான அளவில் கிடைக்காததாலும், அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்ததாலும் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: