கம்பம் தெருக்களில் கயிறுகளை கட்டியும்... முட்களை போட்டும் அடைப்பு: சுகாதார பணியாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் தவிப்பு

கம்பம்: கொரோனா வைரஸ் பீதியால் கம்பம் நகரில் உள்ள தெருக்களில் கயிறுகளை கட்டியும், முட்களை வெட்டி போட்டும் அடைத்து வைத்துள்ளனர். இதனால் சுகாதார பணியாளர்கள் தெருவுக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதுமந் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கம்பம் 8வது வார்டு தாத்தப்பன் குளம் பகுதியில் ஒரு சிலர் தெருக்களில் முட்களை வெட்டி போட்டிருந்தனர்.அதேபோல கம்பம் கூலத்தேவர் முக்கு, என்.கே.பி.ராஜ் கவுடர் தெருக்களில் கொச்சை கயிறை தெரு முழுவதும் ரோட்டின் குறுக்கே கட்டி வைத்திருந்தனர்.

Advertising
Advertising

இதனால் இப்பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியவில்லை. கம்பம் தாத்தப்பன் குளம் பகுதி, முகையதீன் ஆண்டவர் புரம், நாட்டுக்கல், காலனி பகுதியிலிருந்து இவ்வழியே ஏராளமானோர் ஆஸ்பத்திரி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இத்தெருக்கள் வழியே செல்வது வழக்கம். தற்சமயம் கம்பத்தில் கொரோனா தொற்று ஒரு சில ஏரியாக்களில் பரவி வருகிறது என்ற வதந்தியால் ஒரு சில ஏரியாக்களில் இது போன்ற தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த தடைகளால் பொது மக்கள் நடக்க முடியாமல் காய்கறிகள் கிடைக்காமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். உடனடியாக இது போன்ற தனிநபர் தடைகளை அப்புறப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் அரசு அதிகாரிகள் முறையான தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: