சம்பா, பால்கரில் நிலநடுக்கம்

புதுடெல்லி: இமாச்சலின் சம்பா மற்றும் மகாராஷ்டிராவின் பால்கரில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் நேற்று காலை 7.03 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம், சம்பா மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில் பூமியில் 5 கி.மீ. ஆழத்தில் இருந்து உருவாகி இருந்தது. ஆனால், இதனால் பாதிப்புகள் எதுவும் இல்லை. எனினும், மக்களிடையே சில மணி நேரம் அச்சம் நீடித்தது. காரணம், கடந்த 11 நாட்களில் இது 8வது முறையாக பதிவாகி உள்ள நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு மார்ச் 27ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் 3 மற்றும் 4.5 ரிக்டர் அளவுக்குள் 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்திலும் நேற்று அதிகாலை 12.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகி இருந்தது.

Related Stories: