‘வடகொரியாவில் ஒருவர் கூட பாதிக்கவில்லை’

சியோல்: கொரேனாவால் வடகொரியாவில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என அந்நாட்டின் சுகாதாரத் துறை மீண்டும் ஒருமுறை அதிகாரப்பூர்வமாக கூறி உள்ளது. சீனாவில் வைரஸ் பரவத் தொடங்கிய ஜனவரி மாதமே வடகொரியாவில் முன்னெச்சரிகை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதன் பலனாக யாரும் நோய் தொற்றுக்கு ஆளாகவில்லை என அந்நாட்டின் அவசரகால தொற்றுநோய் தடுப்பு துறை இயக்குநர் பாக் மியாங்க் சு கூறி உள்ளார். ஆனால், நவீன மருத்துவ வசதிகள் இல்லாத வடகொரியா, கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதாகவே உலக நாடுகள் கருதுகின்றன.

Related Stories: