ஓசூரில் ஊரடங்கால் போக்குவரத்து முடக்கம் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்படும் குடைமிளகாய்: விவசாயிகள் வேதனை

ஓசூர்: ஊரடங்கு  உத்தரவால் வாகன போக்குவரத்து இன்றி, ஓசூர் பகுதியில் விளையும் குடைமிளகாயை விற்பனைக்கு அனுப்ப  முடியாமல் விவசாயிகள் குப்பையில் கொட்டுகின்றனர். நாடு  முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.  இதனால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஓசூர் பகுதியில்  சாகுபடி செய்யப்பட்ட மலர்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை சந்தைக்கு கொண்டு  செல்ல முடியாமல் உள்ளது. ஓசூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குடை மிளகாயை விவசாயிகள் விற்பனைக்கு அனுப்ப  முடியாமல், குப்பைகளில் கொட்டி விட்டு செல்கின்றனர்.

இது குறித்து  விவசாயிகள் கூறுகையில், ‘ஒரு விவசாயி 40 முதல் 50 டன் அளவிலான குடை  மிளகாய்களை பறித்து விற்பனைக்கு அனுப்புகிறார். ஓசூர் பகுதிகளில்  சாகுபடியாகும் குடைமிளகாய் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா,  மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு  விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால்  குடைமிளகாயை விற்பனைக்கு அனுப்பி வைக்க முடியாமல், டன் கணக்கில் குப்பைகளில் வீசப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு  லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’ என்றனர். ஊரடங்கு அமலுக்கு முன்பு  ஒரு கிலோ குடைமிளகாய் 100 ரூபாய் வரை விலை போனது குறிப்பிடத்தக்கது.

Related Stories: