டெல்லி நிஜாமுதீன் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு: கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 441 பேருக்கு கொரோனா அறிகுறி.....டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 441 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1041 ஆக அதிகரித்துள்ளது.

102 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணம் அடைந்து இருப்பதாகவும்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது; கொரோனா வைரஸின் சமூக பரவல் கட்டத்தில் டெல்லி நுழையவில்லை. உள்ளூர் பரிமாற்றங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. டெல்லி நிஜாமுதீன் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி அரசு துணை நிலை ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளது, அவர் விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று நான் நம்புகிறேன்.

எந்தவொரு அதிகாரிகளிடமும் ஏதேனும் அலட்சியம் காணப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தம் 1,548 பேர் மார்க்கஸிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர், அவர்களில் 441 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறது. நாங்கள் அவர்களை மருத்துவமனைகளுக்கு மாற்றியுள்ளோம், அவர்களுக்கு சோதனைகள் நடத்தப்படுகின்றன. அறிகுறிகளைக் காட்டாத 1,107 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தமிழர்கள் தான் அதிகம்

டெல்லியின் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாத் சபையில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு தமிழ்நாடு-510, அசாம் -281, உத்தரபிரதேசம் -156, மராட்டியம்-109, மத்தியபிரதேசம்-107, பீகார்-86, மேற்குவங்காளம்-73, தெலுங்கானா-55, ஜார்கண்ட்-46, உத்தரகாண்ட்-34, அரியானா-22, அந்தமான் நிகோபார்-21, ராஜஸ்தாந்19, இமாசலப்பிரதேசம், கேரளா, ஓடிசாவில் தலா 15, பஞ்சாப்-9 மேகலயா-5.

Related Stories: