கொரோனா அறிகுறிகளை அடித்து விரட்டும் கபசுரக் குடீநீர்.. மருந்துக்கடைகளில் வாங்க குவியும் மக்கள்

சென்னை : தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் கபசுர குடிநீர் பொடியை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட நாட்டு மருத்துவ முறைகள் மீது மக்கள் நாட்டம் அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவமுறை கூட்டுறவு மருந்தகம் எனப்படும் மத்திய அரசு நிறுவனமான IMPCOPS, சித்தா, ஆயுர்வேதா மருத்துவ முறைகளின் மையமாக திகழ்கிறது.

Advertising
Advertising

இந்த IMPCOPS அமைப்பு கபசுர குடிநீர் தயாரிப்பதற்கான பொடியை தயாரித்து விநியோகிக்கிறது. இந்த கபசுர குடிநீர் பொடி அதிகளவில் விற்பனையாவதாக IMPCOPS மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இருமல், காய்ச்சல் போன்றவற்றை தடுக்கும் வகையில், 15 வகையான மூலிகைகளை சேர்த்துதான் கபசுர குடிநீர் பொடி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை சித்த மருத்துவமனைகளிலும் மருந்துக்கடைகளிலும் மக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றன.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், கபசுர குடிநீர் சூரணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சித்த மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். எனவே கபசுர பொடியை காய்ச்சி குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும்.  

Related Stories: