ஏப்ரல் 7ம் தேதி கொரோனா இல்லாத மாநிலமாகத் தெலங்கானா மாறும் : முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உறுதி

ஹைதராபாத் : ஏப்ரல் 7ம் தேதிக்குள் தெலுங்கானாவில் கொரோனா இருக்காது என்று தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Advertising
Advertising

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பு  எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 7ம் தேதிக்குள் தெலுங்கானாவில் கொரோனா இருக்காது என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.கொரோனா இல்லாத மாநிலமாக ஏப்ரல் 7ம் தேதிக்குள் தெலுங்கானா மாற்றப்படும். புதிதாக யாருக்கும் பாதிப்பு வராமல் இருந்தால் ஏப்ரல் 7க்குள் தெலுங்கானாவில் கொரோனா இருக்காது என்று முதல்வர் சந்திரசேகராவ் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகராவ் , தெலங்கானாவில் மொத்தம் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஒருவர் உயிரிழந்ததாகவும், 11 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் குறிப்பிட்டார். 58 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் விரைவில் குணமடைந்து விடுவார்கள் எனவும் தெரிவித்தார்.வெளிநாடுகளில் இருந்து வந்த 25 ஆயிரத்து 937 பேர் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தனிமைக் காலம் ஏப்ரல் ஏழாம் தேதி முடிவடைவதால், அன்று முதல் தெலங்கானா மாநிலம் கொரோனா இல்லாத மாநிலம் ஆகிவிடும் என்றும் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

Related Stories: