கிருஷ்ணகிரி அருகே சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி திடீர் சாவு: மருத்துவக்குழுவினர் முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சவுட்டஅள்ளி அருகே பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(43). கட்டிட தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல் என கொரோனா தொற்று அறிகுறியுடன் இருந்துள்ளார். அதிக காய்ச்சலுடன் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். சக்திவேல் மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் வயிற்று போக்கால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், பள்ளிப்பட்டி கிராமத்தில் டாக்டர் செல்வம் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் வில்லியம்ஸ், வெங்கடேஸ்வர பெருமாள், மணிவண்ணன், நரசிம்மராஜ், ராம்குமார் உள்ளிட்ட 31 பேர் கொண்ட குழுவினர் முகாமிட்டு, கிராம மக்களை ஆய்வு செய்தனர். கொரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறியுடன் ஒருவர் மரணமடைந்தால், 5 கி.மீ., தொலைவை ஒரு கண்டெய்ன்மெண்ட் மண்டலமாக அறிவிக்கப்படும். சக்திவேலின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், இந்த குழுவினர் அந்த கிராமத்தில் தனித்தனி குழுவாக பிரித்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனையில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: