கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வேலூர் விஐடி சார்பில் ரூ.1.25 கோடி நிதியுதவி

வேலூர்: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வேலூர் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ₹1.25 கோடி நிதியுதவி முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா அறிகுறிகளுடன் 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகளுக்கு சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு வழங்கலாம் என்று அரசு கேட்டுக்கொண்டது.

அதன்படி, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ₹1.25 கோடி நிதி முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. விஐடி வேலூர் மற்றும் விஐடி சென்னை பேராசிரியர்கள், ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் மற்றும் விஐடி நிர்வாகம் சார்பில் ₹1.25 கோடி வரைவோலையை வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைக்கு அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய விஐடி தயாராக உள்ளது என்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.

Related Stories: