உலகளவில் கொரோனா வைரஸ் பரவியதால் சீனா மீது வெறுப்பு 90% அதிகரிப்பு: அமெரிக்காவில் ஆசிய மக்கள் மீது தாக்குதல்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவிய பின்னர், அந்நாட்டின் மீது சர்வதேச மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஒரு தொழில்நுட்ப தொடக்க அறிக்கையின்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதால் சீனா மற்றும் சீன மக்களின் டுவிட்டரில் வெறுக்கத்தக்க பதிவுகள் 900 சதவீதம் உயர்ந்துள்ளது. கொரோனாவின் பாதிப்புக்கு மத்தியில் முக கவசம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை சீனா சில நாடுகளுக்கு வழங்கிய போதிலும், மக்கள் சீனாவை வெறுக்கத்தக்க கண்களால் பார்க்கின்றனர். சமூக ஊடகங்கள் முதல் தகவல் தொடர்பு பயன்பாடுகள், மீடியா ரூம் மற்றும் கேமிங் சேவைகள் வரை சீனாவைப் பற்றி வெறுப்பான, மோசமான சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.

Advertising
Advertising

இஸ்ரேலின் தொழில்நுட்ப தொடக்க நிறுவனமான எல் 1 ஜேஹெச்.டி தனது அறிக்கையில், ‘எங்கள் தரவுகளின்படி, சீன மக்கள் தொகையை காட்டிலும் பலமடங்கு அதிகமாக அவர்கள்மீது வெறுப்பு பதிவுகள் பதிவு செய்யப்படுகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மையம் சீனா என்று எல்லா பதிவுகளிலும் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக சீன வம்சாவளியை சேர்ந்த ஆசிய கண்டத்தை சேர்ந்த மக்களையும் திட்டி தீர்க்கின்றனர். குறிப்பாக, ‘குங்ஃப்ளூ, சீன வைரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் வைரஸ்’ போன்ற இனவெறி ஹேஷ்டேக்குகளை பலர் பயன்படுத்துகின்றனர்.

ஆசிய மக்கள் மீது கோபத்தைத் தூண்ட சில ஊடக அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. ‘சீனா வேண்டுமென்றே கொரோனா வைரசை உலகில் திணிக்கிறது’ ஒரு ஊடகம் வெளியிட்ட வீடியோவில்  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வெறுக்கத்தக்கவை. அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘சீன வைரஸ்’ என்று கொரோனா வைரசை கூறியதில் இருந்து, உலக மக்களிடையே சீனாவுக்கு எதிரான வெறுப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள ஆசிய மக்கள்மீது பல இனவெறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பல மனித உரிமைகள் குழுக்கள், ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் சமீபத்திய அறிக்கை சீனாவுக்கு எதிரான வெறுப்புணர்வை மேலும் அதிகரித்துள்ளதை உறுதிபடுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: