கொரோனா தடுப்புப் பணி: நாட்டை காப்பாற்ற அதிகரிக்கும் நிதியுதவி; டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி... ரத்தன் டாடா அறிவிப்பு

மும்பை: கொரோனா தடுப்புப் பணிகளுக்கு டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி நிதியுதவி வழங்குவதாக ரத்தன் டாடா அறிவித்துள்ளார். கொரோனாவை தடுப்பதற்கான அவசர தேவைகளுக்கு நிதி வழங்குவதாக ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசால் இந்தியாவில் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட சூழலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66-லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்துள்ள இந்த சூழலில், மக்களுக்கு உதவும் வகையில் டாடா குழுமம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளைச் செய்வதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவரது குழும தலைவர் ரத்தன் டாடா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது;

Advertising
Advertising

கொரோனா நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கான தேவைகளைச் சமாளிக்க அவசர ஆதாரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், அதிகரித்து வரும் நிகழ்வுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான சுவாச அமைப்புகள், தனிநபர் பரிசோதனையை அதிகரிக்க கருவிகளை பரிசோதித்தல், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டு சிகிச்சை வசதிகளை அமைத்தல், அறிவு மேலாண்மை மற்றும் சுகாதார பயிற்சி தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் நலனுக்காக இந்த நிதி பயன்படும்  தெரிவித்துள்ளார். டாடா அறக்கட்டளைகள் மற்றும் டாடா குழுமம் கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு தேவைகளுக்காக உதவ முன்னின்றுள்ளது. கடந்த காலத்தை விட தற்போது உள்ள நிலை மிக முக்கியமானது. கொரோனா வைரஸ் என்பது மனித இனமாக நாம் எதிர்கொள்ளும் கடினமான சவால்களில் ஒன்றாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: