28,229 உயிர்களை குடித்த கொடூர கொரோனா.. இத்தாலியில் 9,134, ஸ்பெயினில் 5,690, சீனாவில் 3,295 பேர் உயிரிழப்பு ; வாழ்வா சாவா அச்சத்தில் மக்கள்

வாஷிங்டன் : உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 28,229 உயிரிழந்த நிலையில், கொரோனாவுக்கு இதுவரை 613,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று நாளில் மட்டும் 888 பேர் பலியாகி உள்ளனர்.

Advertising
Advertising

ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்டோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது. ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலி சீனாவைத் தாண்டி இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறது.மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 137,224 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளும் உயிரிழப்புகளும்..

அமெரிக்காவில் 104,256 பேருக்கும், இத்தாலியில் 86,498 பேருக்கும் , சீனாவில் 81,394 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினில் 72,248 பேருக்கும், ஜெர்மனியில் 53,340 பேருக்கும், பிரான்ஸில் 32,964 பேருக்கும் ஈரானில் 35,408 பேருக்கும் ஐரோப்பியாவில் 14,543 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 9,134 பேரும், ஸ்பெயினில் 5,690 பேரும், சீனாவில் 3,295 பேரும், அமெரிக்காவில் 1,704 பேரும் உயிரிழந்துள்ளனர். ஈரானில் 2,517 பேரும், பிரான்சில் 1,995 பேரும், ஐரோப்பியாவில் 759 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: