எஸ்பிஐ வட்டி குறைப்பு

புதுடெல்லி: ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி 0.75 சதவீதம் குறைத்ததை தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கியும் (எஸ்பிஐ) கடன் வட்டியை 0.75 சதவீதம் குறைத்துள்ளது. இது அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. சந்தை அடிப்படையில் மற்றும் ரெப்போ வட்டி அடிப்படையிலான கடன்களுக்கு இது பொருந்தும்.

ஓராண்டு அடிப்படையில், சந்தை அடிப்படையிலான கடன்களுக்கு வட்டி 7.8 சதவீதத்தில் இந்து 7.05 சதவீதமாகவும், ரெப்போ அடிப்படையிலான கடன்களுக்கு 7.4 சதவீதத்தில் இருந்து 6.65 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதன்படி 30 ஆண்டில் திருப்பி செலுத்தும் வகையில் ₹1 லட்சம் கடன் வாங்கியிருந்தால், இஎம்ஐ ₹52 குறையும்.

Related Stories: