உலகில் முதலாவதாக கொரோனாவுக்கு வீட்டு நாய் பலி

ஹாங்காங்: கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், ஹாங்காங்கில் 453க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹாங்காங்கின் வேளாண்மை, மீன்வள மற்றும் பாதுகாப்புத் துறையின் பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: ஹாங்காங்கில் ஒரு நபருக்கு ெசாந்தமான பொமரேனியன் நாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 16ம் தேதி உடல் நலம் தேறியது. ஆனால் தற்போது இறந்துள்ளது. முன்னதாக, சிகிச்சைக்கு நாய் வந்தபோது, அதற்கு உண்மையில் கொரோனா வைரஸ் தொற்று பிடித்திருக்கிறதா என்று நிபுணர்களுக்குத் தெரியவில்லை.

ஏனென்றால் ரத்த பரிசோதனையால் மட்டுமே அதை உறுதிப்படுத்த முடியும். இப்போது, ரத்த பரிசோதனை முடிவு வந்துள்ளதால், அந்த நாய்க்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட 17 நாய்கள் மற்றும் 8 பூனைகளில், இரண்டு நாய்களுக்கு மட்டுமே வைரசுக்கு சாதகமாக தொற்று உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உலக சுகாதார அமைப்பு நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளை கொரோனா வைரஸ் தாக்காது என்று கூறிய நிலையில், சமீபத்தில் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்.

இருப்பினும், தற்போது வரை செல்லப் பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்கு ெகாரோனா வைரஸ் தொற்று பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: