வெளிமாநிலங்களில் தவித்து வரும் தமிழக லாரி ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்: வைகோ கோரிக்கை

சென்னை: வெளிமாநிலங்களில் தவித்து வரும் தமிழக லாரி ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. 5,31,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், கொரோனா என்றாலே நடுநடுங்க வைக்கின்ற இந்தக் கொடிய தொற்று நோய் அனைத்து மட்டத்திலும் வேகமாகப் பரவி வருகின்றது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். 24 ஆயிரம் பேர் இறந்துவிட்டார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டை விட்டு 20 நாட்களுக்கு முன்பு வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்கள் கடுமையான நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

ஒரு லாரி ஓட்டுநர் ஹைதராபாத்தில் இருந்து கதறுவதைக் காணொலியில் கண்டேன். சாப்பாடு இல்லாமல் நாங்கள் பட்டினி கிடக்கின்றோம். எங்களை அடிக்கிறார்கள். எங்களுக்கு நாதியே இல்லையா? என்று கேட்கிறார்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்கவும் தமிழ்நாடு முதல்வர் ஏற்பாட்டின் பேரில், தமிழ்நாடு தலைமைச் செயலாளரும், மற்ற அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: