வங்கிகள் இணைப்பு ஏப்.1 முதல் அமல்

புதுடெல்லி: வங்கிகள் இணைப்பு, திட்டமிட்டபடி அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  கூறினார். பொதுத்துறை வங்கிகளை இணைத்து அவற்றின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.  ஏற்கெனவே, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. இதுபோல், 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக்க,  வங்கிகள் இணைப்பு திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதன்படி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி  ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி கணரா வங்கியுடனும், ஆந்திரா வங்கி, கார்ப்பொரேஷன் வங்கி ஆகியவை யூனியன்  வங்கியுடனும், அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட உள்ளது.

Advertising
Advertising

கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் இந்த திட்டத்தில் மாற்றம் வருமா என நிருபர்கள் கேட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்  அளிக்கையில், ‘‘வங்கிகள் இணைப்பு திட்டமிட்டபடி அமலுக்கு வரும். இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை’’ என்றார்.

Related Stories: