காஷ்மீரில் நள்ளிரவு முதல் சர்வதேச எல்லையில் பாக். துப்பாக்கிச்சூடு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் எல்லையோர பகுதியில் கடந்த வாரம் முதல் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. கத்துவா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி முதல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. நேற்று காலை 5 மணி வரை இது நீடித்தது.  இந்த தாக்குதலில் எல்லையோர கிராமத்தில் பல வீடுகள் சேதமடைந்தன. மக்கள்  பதற்றம் அடைந்தனர். மக்கள் பதுங்கு குழிகளில் தங்கினர். இந்த தாக்குதலுக்கு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தானின் தாக்குதலில் கிராமத்தை சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். ஒரு பெண் பதற்றத்தால் சுயநினைவை இழந்தார். இந்திய வீரர்களின் பதிலடியில் பாகிஸ்தான் தரப்பில் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை.

Related Stories: