கொரொனா அழியும் என்ற நம்பிக்கை உள்ளது; ஒலிம்பிக் ரத்தானால் என் மனசு உடைஞ்சிடும்: இந்திய மல்யுத்த வீராங்கனை உருக்கம்

மும்பை: உலகளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டு, பெரும்பாலான பயிற்சி மையங்களும் தேசிய முகாம்களும் மூடப்பட்ட நிலையில் உள்ளன. ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு தங்கம் வென்ற மல்யுத்த வீரர் வினேஷ் போகாட், 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கக் கூடிய முதல் இந்தியர் என்ற பெருமையை அடையவுள்ளார். கொரோனா குறித்து அவர் கூறியதாவது: நான் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) நார்வேயில் இருந்து டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கினேன்.

நான் பார்த்தது விசயம் என்னை மிகவும் பாதித்தது. எல்லா இடங்களிலும் முகமூடி மனிதர்கள் இருந்தனர். விமான ஊழியர்கள் முதல் வரிசையில் நிற்கும் மக்கள் வரை அனைவரும் பதற்றத்துடன் காணப்பட்டனர். விளையாட்டு வீரர்களாகிய எங்களுக்கு அத்தகைய காட்சிகளை கண்டதில்லை. நான் விரைவில் விமான நிலையத்திலிருந்து வெளியேற விரும்பினேன். உலகம் இதற்கு முன்பு கண்டிராத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு நாங்கள் தயாராகி வரும் நேரத்தில் விளையாட்டு வீரர்களுக்கு இது வந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை, டோக்கியோ ஒலிம்பிக் தொடர்கிறது, நான் முழுமையாக கவனம் செலுத்துகிறேன்.

ஒலிம்பிக் ரத்து செய்யப்படுவதை நான் விரும்பவில்லை. அதை இரண்டு-மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க நேர்ந்தால், பரவாயில்லை. அதற்கேற்ப எங்களை தகவமைத்துக் கொள்வோம். கொரோனா நம்மீது வீசப்பட்ட ஒரு புதிய சவால்; நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒலிம்பிக் ரத்துசெய்யப்பட்டால், நான் மனம் உடைந்து போவேன். இன்னும் தகுதி பெறாத விளையாட்டு வீரர்களுக்கும், தற்போதைய சூழ்நிலைகளில் பயிற்சி பெற முடியாதவர்களுக்கும் அந்த அறிவிப்பு மிகவும் கடினமாக இருக்கும். ஆயினும்கூட, இந்த வைரஸ் விரைவாக அழிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: