இந்திய வீரர்களுக்கான ஊக்கமருந்து ‘டெஸ்ட்’ ஒத்திவைப்பு: ‘நாடா’ அமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அரசு மருத்துவர்களைக் கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனைகளை நடத்திவந்த தேசிய ஊக்க மருந்து தடுப்பாணையம் (நாடா), தற்போது ஊக்கமருந்து சோதனையை ஒத்திவைக்கவுள்ளதாகத் தகவலளித்துள்ளது.

இதுகுறித்து பேசிய ‘நாடா’ அமைப்பின் முதன்மை நிர்வாக மேலாளர் நவின் அகர்வால் கூறுகையில், ‘‘தற்சமயம் அரசு மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாகப் பொதுமக்களுக்கு மருத்துவம் அளித்துவருவதால், ‘நாடா’ தனது ஊக்கமருந்து பரிசோதனைகளை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. அதேசமயம் மிகவும் முக்கியமான ஊக்கமருந்து சோதனைகளுக்கு மட்டும் மருத்துவர்களை நாடவுள்ளோம்.

தற்போது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊக்கமருந்து சோதனைகளை மட்டும் தற்போது பரிசோதிப்போம். மீதமுள்ள வீரர்களின் பரிசோதனைகள் எதுவும் பரிசோதிக்கபட மாட்டாது. கொரோனா அச்சம் மற்றும் தடைகள், கட்டுபாடுகள் பிறகே மற்ற வீரர்களுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார். ஏற்கனவே, உலக ஊக்க மருந்து தடுப்பாணையம் (வாடா), உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்புக்கு (ஏடிஓ) புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல் பட்டியலை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: