கொரோனாவால் ஐகோர்ட் கிளைக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை: தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் மனு

மதுரை: கொரோனா பாதிப்பால் கோடை விடுமுறையை முன் கூட்டியே விடவேண்டுமென தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் கிளை வக்கீல்கள் மனு அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பியுள்ளனர்.

அதில்,‘‘சென்னை ஐகோர்ட் மற்றும் அதன் மதுரை கிளைக்கு ஆண்டுதோறும் மே மாதம் கோடை விடுமுறை விடப்படும். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், நீதிமன்ற பணிகள் பாதித்துள்ளன. இறுதி விசாரணை வழக்குகள் எடுக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கையே சரியான மருந்து என்ற அடிப்படையில், சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளைக்கு மே மாதம் விடப்படும் கோடை விடுமுறையை முன்கூட்டி ஏப்ரல் மாதத்தில் அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: