கொரோனா காரணமாக பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் : தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை : கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் 21 சோதனைச் சாவடிகளிலும் பரிசோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் அனைவரும் முகக்கவசம்  அணிய தேவையில்லை என்றார். முகக்கவசம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மத்திய பணிமனையில் உள்ள பேருந்துகளில் கிருமி நாசினி தெளித்து யுத்தம் செய்யப்படுவதை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

Related Stories: