பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடும் திட்டம் இல்லை: மக்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் விளக்கம்

டெல்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடுவதோ அல்லது தனியாருக்கு விற்கும் என்னமோ மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இதனை கூறியிருக்கிறார். பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களின் தற்போதைய எண்ணிக்கை எத்தனை என்று திமுக உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை விற்கப்போவதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் அரசு அச்சத்தை உருவாக்கியத்தினாலேயே ஏராளமானோர் வேறு சேவை நிறுவனங்களுக்கு மாறியதாக தயாநிதிமாறன் குற்றம் சாட்டினார். இதுகுறித்து மக்களவையில் தயாநிதிமாறன் தெரிவித்ததாவது, நீங்கள் உற்பத்தி செலவு 23 சதவீதம் வரை குறைந்துவிட்டது என்கிறீர்கள். அப்படியானால் செயல்பாட்டு லாபத்தை அதிகரிக்கப்போகிறீர்களா? என சாடினார்.

மேலும் வாடிக்கையாளர்கள் எத்தனை பேர் பிற சேவைக்கு சென்றனர்? பி.எஸ்.என்.எல். - ஐ விற்கப்போவதாக அச்சத்தை ஏற்படுத்தி இருந்தீர்கள். இதனாலேயே பலர் வேறு சேவை நிறுவனங்களுக்கு சென்றுவிட்டனர். பலர் வேறு சேவை நிறுவனங்களுக்கு சென்றதால் நஷ்டம் ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மரபுக்குள் தாம் செல்ல விரும்பவில்லை என்று விளக்கம் அளித்தார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இருந்து 80 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற்றதால் உருவான காலி பணியிடங்களை ஒழிப்பதே அரசின் திட்டம் என்று திரிணாமுல் உறுப்பினர் சாகுந்தராய் குற்றம் சாட்டினார். இதனை மறுத்த அமைச்சர், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடுவதோ அல்லது தனியாருக்கு விற்கும் என்னமோ அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: