திருத்துறைப்பூண்டியில் புகழ் பெற்ற முள்ளாச்சிமாரியம்மன் கோயில் திருவிழா: 100க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகரில் உள்ள புகழ் பெற்ற முள்ளாச்சி மாரியம்மன் கோயில் 76ம் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.ஒவ்வொறு நாளும் உபயதாரர்கள் சார்பில் தினமும் தனி தனி வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. முக்கிய திருவிழாவான நேற்று அதிகாலை முதல் பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், மாவிளக்கு போடுதல், காணிக்கை செலுத்துதல், முடி இறக்குதல் அபிஷேக ஆராதணைகளும் நடைபெற்றது. மாலை நேர்த்திக்கடன் நிறைவேற்ற பக்தர்கள் தீமிதித்தனர். நகர முழுவதும் பல இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு மோர், சர்பத் வழங்கப்பட்டது. பல இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா, தக்கார் ராமதாஸ், மேலாளர் சீனிவாசன் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி துரை மேற்பார்வையில் திருத்துறைப்பூணடி டிஎஸ்பி பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸ்சார் ஈடுபட்டு இருந்தனர். நாளை 17ம் தேதி இரவு தேளிகுளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. வரும் 22ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Stories: