சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் சமூக ஆர்வலர்கள்

ஜோலார்பேட்டை: சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் வனவிலங்குகளின் தாகத்தை தொட்டிகளில் தீர்க்க சமூக ஆர்வலர்கள் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். ஜோலார்பேட்டையில் உள்ள கோடியூர் பாதர்கெசு ரோடு பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி ராஜா. இவர் தின்பண்டம் வியாபாரம் செய்து வருகிறார். இவரது தம்பி பகவத் இவரும் இதே தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் புகழேந்தி ராஜா மகள் தென்றல் உட்பட  இவர்கள் அனைவரும் சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் உள்ள குரங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் தாகத்தை தீர்க்க கடந்த 4 ஆண்டுகளாக வாரத்திற்கு ஒரு நாள் கேன்களில் தண்ணீரை எடுத்துச்சென்று சாலையோரம் வனத்துறையினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் நிரப்பி குரங்குகள், பறவைகள் போன்றவற்றின் தாகத்தை தீர்த்து வருகின்றனர்.

மேலும் இந்தப்பணியில் கல்லூரி மாணவிகளான தென்றலின் தோழிகள் காவியா, ஓவியா, ஸ்ருதி, சுவாதி ஆகியோர் ஒன்றிணைந்து விடுமுறை நாட்களில் ஏலகிரி மலைக்கு சென்று குரங்குகளுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளால் சாலையோரங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளையும் சேகரித்து மறுசுழற்சிக்காக ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து வருகின்றனர். மேலும் பசுமையை காக்க பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர்.

Related Stories: