சென்னை: மதுபாட்டிலில் உள்ள மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்ற வாசகத்தை தமிழக அரசு மாற்ற முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பட்டிதொட்டியெல்லாம் மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுபான கடைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்புமே பாரபட்சமின்றி குவிந்து வருகின்றனர். 2010ம் ஆண்டு, சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.34.000, தினமும் 336 பேர் விபத்துகளில் மரணமடைகின்றனர். மது மற்றும் போதைமருந்து தகவல் மையத்தின் ஆய்வுப்படி, 40% சாலை விபத்துகள் குடிபோதையினால் ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், இனி மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்ற வாசகம் மதுபான பாட்டில்களில் இடம் பெறுகிறது.
