திருப்பதி கோயில் தங்கும் அறைகளில் தெரு குழாயில் பிடித்த தண்ணீர்: பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை: திருப்பதி கோயில் தங்கும் அறைகளில் தெருக் குழாய்களில் வரும் தண்ணீரை பிடித்து விநியோகம் செய்வதால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையில் சுற்றுச்சூழலை பாதித்து வரும் பிளாஸ்டிக் உபயோகம் தடை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டிலும் இதில் அடக்கம். இதனால், பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு தேவஸ்தான நிர்வாகம், பக்தர்கள் தங்கும் ஓய்வு அறைகளில் 20 லிட்டர் கேன்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்கு முடிவு செய்தது.

இதற்காக அறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு தொழிலாளர்கள் மூலம் பக்தர்கள் ஓய்வு அறைகளுக்கான சாவியை வழங்கும்பொழுது 20 லிட்டர் கேனில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் படி தெரிவிக்கப்பட்டது.

ஆனால், துப்புரவு தொழிலாளர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், தெரு குழாய்களில் 20 லிட்டர் கேன்களில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை பிடித்து அறைகளுக்கு வைக்கின்றனர். இது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: