முழுமையாக மாற்றி அமைத்தது மத்திய அரசு: தேசிய பேரிடர் அமைப்புக்கு இனிமேல் அமித்ஷா தலைவர்

புதுடெல்லி: தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு அமைப்பு முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளம், நிலநடுக்கம் போன்ற ஆபத்துக்கள் ஏற்படும்போது அது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது பேரிடர் மேலாண்மை எனப்படும். அவசர காலங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு அமைப்பு (என்பிடிஆர்ஆர்) உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அமைப்பை மத்திய அரசு நேற்று முழுமையாக மாற்றி அமைத்துள்ளது. இந்த அமைப்பின் புதிய தலைவராக மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் துணைத் தலைவர்களாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் துணைத் தலைவர் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு பொறுப்பு வகிக்கும் இணையமைச்சர் செயல்படுவார்கள். இது தவிர அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், நரேந்திர சிங் தோமர், ரமேஷ் போக்ரியால், ஹர்ஷ் வர்தன், ஹர்திப் சிங் பூரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பேரிடர் மேலாண்மையை நிர்வகிக்கும் அமைச்சர்கள்,  டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரூ மற்றும் ஐதராபாத் மேயர்கள், மற்றும் இந்த மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories: