நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் கேப்டன் வீராட் கோஹ்லி சரியாக விளையாடவில்லை. இது குறித்து மூத்த வீரர் கபில்தேவ் ‘வயது காரணமாக பந்தை கணிப்பதில் கோஹ்லியின் பார்வையும், கைகளும் ஒருங்கிணைந்து செயல்படததால் அவர் நியூசி தொடரில் சரியாக ஆடவில்லை. அதற்கான பயிற்சியை மேற்கொண்டால் அதனை சரி செய்து விடலாம்’ என்று ஆலோசனை தெரிவித்திருந்தார். கூடவே ‘வீரேந்திர சேவாக், ராகுல் திராவிட், விவியன் ரிச்சர்ஸ்ட்ஸ் என பல வீரர்கள் இதுப்போன்ற பிரச்னைகளை சந்தித்துள்ளனர்’ என்றும் கூறியிருந்தார்.இந்நிலையில் வீரேந்திர சேவாக், ‘ கோஹ்லிக்கு கண்,கை ஒருங்கிணைப்பு பிரச்னை இல்லை.