உலக அளவில் முதல் 50 சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு : டெல்லி ஐஐடிக்கு 47வது இடம், மும்பை ஐஐடிக்கு 44வது இடம்

லண்டன் : உலக அளவில் முதல் 50 சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் மும்பை மற்றும் டெல்லி ஐஐடி கல்வி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. லண்டனில் தலைமையிடமாக கொண்ட பிரபல தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் 44வது இடத்தை மும்பை ஐஐடியும் 47வது இடத்தை டெல்லி ஐஐடியும் பிடித்துள்ளன.பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் இவ்விரு கல்வி நிலையங்களும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஐ.ஐ.டி, மும்பை கடந்த ஆண்டு 53வது இடத்திலிருந்து ஒன்பது இடங்களை  பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டு 44வது இடத்தை பிடித்துள்ளது.

அதே போல் ஐஐடி டெல்லி கடந்த ஆண்டு 61வது இடத்தை பிடித்திருந்தது. மேலும் இதே தரவரிசையில் சென்னை ஐஐடி முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளது. மும்பை, டெல்லி மற்றும் சென்னை ஐஐடிக்கள் உட்பட நாட்டின் 12 கல்வி நிலையங்கள் உலக அளவில் முதல் 500 இடங்களுக்குள் வந்துள்ளன. அவற்றில் குடியுரிமை திருத்தச் சட்டம் காரணமாக தற்போது பதற்றமாக காணப்படும் டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகமும் ஒன்று. இந்த பட்டியலில் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) முதலிடத்தையும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் பிடித்தன.

Related Stories: