சந்திரயான்-3 அடுத்த ஆண்டு ஜூனுக்குள் விண்ணில் ஏவப்படும்: மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் தகவல்

புதுடெல்லி: மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பிரதமர் அலுவலகத் துறை அமைச்சர் ஜிஜேந்திர சிங் இதற்கு அளித்த பதிலில் கூறியதாவது: சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சந்திரயான்-2 திட்டம் அளித்த பாடத்தில் இருந்து சந்திரயான்-3க்கான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும்போது ஏற்பட்ட கோளாறை சரி செய்து இந்தாண்டு இறுதிக்குள் மீண்டும் செயல்படுத்துவதற்கு இஸ்‌ரோ முயற்சித்து வருகிறது.  செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை பொருத்தவரை, அதன் பாகங்களை இணைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விண்வெளிக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியும் தொடங்கி அளிக்கப்பட்டு வருகிறது. விண்வெளி வீரர்களுக்கான மருத்துவ உபகரணங்கள், சுகாதாரத்தை கண்காணிக்கும் கருவிகள், அவசரத் தேவைக்கான உபகரணங்கள் உள்ளிட்டவைகளை வடிவமைத்துத் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இது தவிர, பிரான்ஸ் நாட்டின் விண்வெளி அமைப்பின் பங்களிப்புடன், விண்கலத்தை செலுத்த உள்ள விமானிகளுக்கு 3 வார கால பயிற்சி இஸ்ரோவில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: