இலங்கை அகதிக்கு குடிபெயர்தல் சான்று வழங்க 300 லஞ்சம் வருவாய் ஆய்வாளருக்கு ஓராண்டு சிறை

ஈரோடு:  இலங்கை அகதியிடம் குடிபெயர்தல் சான்று வழங்க ரூ.300 லஞ்சம்  வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம் அரச்சலூர் திருவள்ளூவர் வீதியை  சேர்ந்தவர் மகாலிங்கம். இலங்கை அகதி. இவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் ஊட்டி அகதிகள் முகாமில் இருந்து அரச்சலூர்  குடிபெயர்ந்து வந்தனர். அவர்களுக்கான குடிபெயர்தல்  சான்று பெற மகாலிங்கம்,  அரச்சலூர் உள் வட்ட வருவாய் அலுவலகத்தில் கடந்த 2008ல்  விண்ணப்பித்தார்.

இந்த சான்று வழங்க அவரிடம் வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ) அன்புமணி, ரூ.300 லஞ்சம் கேட்டார். இது குறித்து மகாலிங்கம் புகாரின்படி ஈரோடு லஞ்ச  ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் கொடுத்த 300 ரூபாயை 6-11-2008ல் வருவாய்  ஆய்வாளர் அன்புமணியிடம் வழங்கினார். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கை ஈரோடு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஜோதி விசாரித்து, அன்புமணிக்கு ஒரு ஆண்டு சிறை  தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்  விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Related Stories: