2000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்தக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்தக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியன் வங்கி தனது ஏடிஎம் களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பொதுத்துறை வங்கிகளும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதைக் குறைத்துக் கொண்டு அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளன. 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அச்சடிப்பது குறைந்துள்ள நிலையில், பொதுமக்களிடையே ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்துள்ளது.

மேலும், ஏடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. இந்நிலையில், பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், இந்த விவகாரத்தில் தனக்குத் தெரிந்தவரை, வங்கிகளுக்கு எந்தவொரு அறிவுரையும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார். பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, 2016-17 நிதியாண்டில் 3,54.29 கோடி 2,000 நோட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. ஆனால், 2017-18 நிதியாண்டில் 11.15 கோடி நோட்டு மட்டுமே அச்சிடப்பட்டன. அதன்பிறகு 2018-19 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 4.66 கோடியாக குறைக்கப்பட்டு விட்டது.

Related Stories: