டெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். காவலர் ரத்தன்லால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என பேரவையில் அறிவித்தார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.குடியுரிமை திருத்த  சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

Advertising
Advertising

இந்த வன்முறையால் தலைமை காவலர் ரத்தன்லால் உள்பட 3 காவல்துறை அதிகாரிகள் பலியாகினர். மேலும் 11 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் டெல்லியில் 4 நாட்களாக நடைபெற்று வரும் வன்முறையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்பட உள்ளது. கோலாக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக ரத்தன்லால் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: