தரங்கம்பாடி சாலமன் தோட்டத்தில் தொல்லியல்துறை அகழ்வராய்ச்சி செய்யுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தரங்கம்பாடி: தரங்கம்பாடி சாலமன் தோட்டத்தில் டேனீஷ் காலத்து பொருட்கள் அடிக்கடி கண்டெடுக்கபட்டு வரும் நிலையில் அங்கு தொல்லியல்துறை முழுமையான அகழ்வராயச்சி செய்யு வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர். நாகை மாவட்டம் தரங்கம்பாடியை 1620ம் ஆண்டு முதல் டேனீஷ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் காலத்தில் தரங்கம்பாடி அருகே உள்ள சாத்தங்குடி சாலமன் தோட்டத்தில் டேனீஷ் காலத்து மக்களும் ராஜ குடும்பத்தினரும் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர்களும் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அவா்கள் வாழ்ந்த மாளிகையின் சுவா்கள் இன்றளவும் மறையாமல் காட்சியளித்து கொண்டிருக்கின்றன.

3 வருடங்களுக்கு முன் டேனீஷ் காலத்து நாணயங்கள், சிகரெட் பைப், பயன்படுத்தப்பட்ட பீங்கான் பொருட்கள் உள்ளிட்டவைகளை அப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்க்க செல்லும் பெண்கள் எடுத்து வைத்திருந்தனா். அவைகளை தொல்லியல்துறையினர் கைப்பற்றி டேனீஷ் அருங்காட்சியகத்திற்கு எடுத்து சென்றனர். அவைகளை ஆய்வு செய்ததில் அவைகள் டேனீஷ் காலத்து பொருட்கள் என்பது உறுதி செய்யபட்டன. அதை தொடா்ந்து தொல்லியல்துறையினர் முதல் கட்ட ஆய்வு பணியை செய்தனர். விரைவில் முழுமையான அகழ்வராய்ச்சி அப்பகுதியில் செய்யபடும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் 3 வருடம் ஆகியும் தொல்லியல்துறை அகழ்வராய்ச்சி பணியை கிடப்பில் போட்டுள்ளது. மேலும் அங்கு இரண்டு குளங்கள் உள்ளன. ஒன்று ராஜாகுளம் என்றும் மற்றொன்று ராணிகுளம் என்றும் கூறப்படுகிறது. குளத்தில் உள்ள படிகட்டுகள் அந்த காலத்து கருங்கற்கலால் கட்டபட்டுள்ளன. இங்கு அகழ்வராய்ச்சி செய்தால் மேலும் டேனீஷ் காலத்து பொருட்கள் கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு. எனவே அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: