காந்தி பிறந்த மண்ணில் வன்முறைக்கு இடமில்லை: டெல்லி வன்முறை சம்பவம் குறித்து சோனியா காந்தி, ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: டெல்லி வன்முறை சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் வன்முறைக்கு இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மக்கள் மீது மத ரீதியிலான மற்றும் பிரிவினை கொள்கையை பிரிக்கும் சக்திகளுக்கு எந்த நாட்டில் எங்கும் இடம் இல்லை என்று உழிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு:

டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீசுக்காரர்கள் உட்பட 7 பேர் பலியானது குறித்து ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரம் கவலை அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, டெல்லி கலவரம் மிகவும் கவலை அளிக்கிறது. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அமைதி வழி போராட்டம் தான் தீர்வே தவிர வன்முறையால் எந்த தீர்வும் கிடைக்காது. வன்முறையை கைவிட்டு கலவரக்காரர்களிடம் இருந்து டெல்லி வாசிகள் விலகி இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை:

டெல்லியில் நடந்த சம்பவம் கண்டனத்திற்குரியது. காந்தியடிகள் மண்ணில் கலவரத்திற்கு இடமில்லை. டெல்லியில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: