சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வரும் கொரோனா வைரஸ்: இத்தாலியில் 2 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இத்தாலியில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மக்காவ், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

இந்த நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதியவர் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக இத்தாலியின் வடக்கு மண்டலத்தில் உள்ள 10 நகரங்களில் உள்ள பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன. இத்தாலியில் இன்று நடைபெற இருந்த் 3 சிரீ ஏ கால்பந்து போட்டிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.  வைரஸ் பாதிப்பு காரணமாக இத்தாலியின் வடக்கு மண்டலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: