சில்லி பாயின்ட்...

* தேசிய அளவில் முதல் முறையாக நடத்தப்படும் கேலோ இந்தியா பல்கலை. விளையாட்டு போட்டித் தொடரை ஒடிஷா மாநிலம் கட்டாக், நேரு உள்விளையாட்டரங்கில் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கிவைத்தார். இந்த தொடரில் நாடு முழுவதும் இருந்து 159 பல்கலை. அணிகளை சேர்ந்த 3400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

* வெஸ்ட் இண்டீசுடன் கொழும்புவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வெ. இண்டீஸ் 50 ஓவரில் 289/7 (ஹோப் 115 ரன்). இலங்கை 49.1 ஓவரில் 290/9.
Advertising
Advertising

* தென் ஆப்ரிக்க அணியுடன் ஜோகன்னஸ்பர்கில் நடந்த முதல் டி20ல் ஆஸ்திரேலியா 107 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஆஸி. 20 ஓவரில் 196/6 (பிஞ்ச் 42, ஸ்மித் 45); தென் ஆப்ரிக்கா 14.3 ஓவரில் 89 ரன் ஆல் அவுட். ஆஷ்டன் ஏகார் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories: