பெங்களூர் கராத்தே: வேப்பேரி அகடமி சாம்பியன்

சென்னை: தேசிய அளவிலான கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை வேப்பேரியை சேர்ந்த டாஸ்ஸி அகடமி ஒட்டுமொத்த  சாம்பியன் பட்டம் வென்றது. பெங்களூரு, இன்டர் நேஷனல் அச்சீவர்ஸ் ஷிட்டோ-ரியூ கராத்தே-டூ அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ஐ.ஏ.எஸ்.கே) சார்பில் நடைபெற்ற இந்த போட்டி தொடரை கர்நாடக அமைப்பாளர் சென்செய் எம்.பிலிப்ஸ் ராஜ் தொடங்கி வைத்தார்.  போட்டிகள் யு9, யு12, யு15 வயதினருக்கு  கட்டா, குமிட் ஆகிய பிரிவுகளில் நடைபெற்றன.அதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்  பட்டத்தை சென்னை வேப்பேரியில் உள்ள இன்டர்நேஷனல் டாஸ்ஸி  சாண்டோ ஷிட்டோ-ரியூ கராத்தே-டோ இந்தியா (ஐ.டி.எஸ்.எஸ்.கே ) என்ற அகடமி கைப்பற்றியது. இந்த அகடமியில் பயிற்சி பெற்ற புரசைவாக்கம்  இ.எல்.எம் ஃபேப்ரியூஸ் பள்ளி, வேப்பேரி செயின்ட் ஜோசப் பள்ளி, அனிதா மெதடிஸ்ட்  பள்ளி, அண்ணாநகர்  எஸ்.பி.ஓ.ஏ பள்ளி  மாணவர்கள்  தங்கம், வெள்ளி, வெண் கலப்   பதக்கங்களை

வென்றனர். அவர்களை ஐ.டி.எஸ்.எஸ்.கே கராத்தே அகடமி  மாஸ்டர்கள் சென்செய் எஸ்.சந்தோஷ் குமார்,   சென்பாய் எஸ்.சாந்தகுமார் ஆகிய இருவரும் பாராட்டினர்.
Advertising
Advertising

Related Stories: