சேலத்தில் ஓடும் வேனில் திடீர் தீ விபத்து: காயமடைந்த ஓட்டுனருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

சேலம்:  சேலம் அருகே சென்னை புறவழிச்சாலையில் வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. கரூரிலிருந்து சென்னை புறவழிச்சாலையில் சேலம் வழியாக சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்தது. அதவாது, வண்டியின் இன்ஜின் பகுதியில் புகை வருவதை கண்ட ஓட்டுநர் உடனடியாக சுதாரித்து வேனை சாலையோரம் நிறுத்தியுள்ளார். பின்னர் தீ வேகமாக பரவியதால் ஓட்டுநர் மகேஷ் வேனிலிருந்து இறங்கி ஓடியுள்ளார். அப்போது, ஓட்டுனருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இதன்தொடர்ச்சியாக, வேன் முற்றிலுமாக எரிந்து தீக்கிரையானது.

இதுகுறித்து, தகவலறிந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் வேன் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதேபோன்று, 2 நாட்களுக்கு முன்பு சேலம் கந்தம்பட்டி அருகே பேருந்தும் தீப்பிடித்து எரிந்தது. தொடர்ச்சியாக 2வது சம்பவமாக புறவழிச்சாலையில் வேனும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இன்ஜின் ஒயர்களில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: