தினகரன் நாளிதழ் அன்றே சொன்னது நான்கு வழிச்சாலையில் புற்களில் பற்றி எரிந்த தீ

திருப்பரங்குன்றம்:  நான்கு வழிச்சாலையின் நடுவில் உள்ள செடிகள் மற்றும் புற்களால் தீ விபத்து ஏற்படும் என்று பிப்.18ம் தேதி தினகரன் நாளிதழ் சுட்டிக்காட்டியதை போலவே, திருப்பரங்குன்றம் அருகே தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை நான்கு வழிச்சாலையில் சாலையின் நடுவே  டுவே இருபுறமும் ஏராளமான அளவில் அரளிச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. இரவு நேரத்தில் எதிரும், புதிருமாக வரும் வாகனங்களின் ஒளியிலிருந்து காக்கும் வகையில் அரளிச்செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வருகிறது. அரளிச் செடிகளுக்கு ஊற்றப்படும் தண்ணீரால் செடிகளையொட்டி அதிகளவில் புற்கள் முளைத்து வருகின்றன. தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் அரளிச்செடிகளுக்கு இடையே வளர்ந்த புற்கள் வெப்பத்தின் தாக்கம் தாங்காமல் கருகி வருகின்றன. எனவே, இந்த புற்களால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பிப்.18ம் தேதி தினகரன் நாளிதழ் சுட்டிக்காட்டியது.

அது தற்போது உண்ைமயாகியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகில் கன்னியாகுமாரி, பெங்களூரு செல்லும் நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே பூச்செடிகள் உள்ள இடத்தில் புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. சாலையின் நடுவில் மற்றும் சாலையோரங்களில் வளரும் புற்கள் மற்றும் முட்செடிகளை அவ்வப்போது நெடுஞ்சாலை துறையினர் அகற்றுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதஙகளாக இப்பகுதியில் உள்ள புற்கள் மற்றும் முட்செடிகளை நெடுஞ்சாலைதுறை அகற்றவில்லை.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். நேற்று முன்தினம் சாலையின் நடுவே உள்ள புற்களில் வாகனத்தில் செல்பவர்கள் வீசி விட்டு சென்ற சிகரெட் பற்றி தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்குள்ள பூச்செடிகள் கருகியதுடன், சாலையின் நடுவே பற்றி எரியும் தீயினால் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் திடீரென வேகத்தை குறைக்க நேரிடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் சூழ்நிலை ஏற்பட்டது.  இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்,  இந்த சாலைகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் சேர்த்து தான் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சாலை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. தீப்பிடித்து வாகனங்களில் பற்றி ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன் முறையாக பராமரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Stories: