வெலிங்டன்: நியூசிலாந்து இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டன்னில் தொடங்குகிறது. நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதேபோல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் இழந்தது. இந்நிலையில் இந்த அணிகளும் 2 போட்டிகளை கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் தொடரில் விளையாட உள்ளன. அதில் முதல் டெஸ்ட் இன்று வெலிங்டன்னில் தொடங்குகிறது. இந்த சுற்றுப் பயணத்தில் ஆளுக்கொரு தொடரை வென்று 2 அணிகளும் சமனிலையில் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி முன்னிலை பெற 2 அணிகளும் வேகம் காட்டும். ஆனால் ஐசிசி உலக ெடஸ்ட் சாம்பியன் தொடரில் இதுவரை 7 டெஸ்ட்களில் விளையாடி உள்ள இந்தியா எல்லாப் போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரு டெஸ்ட்டில் வெற்றி 4 டெஸ்ட்டில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது.