அகமதாபாத்: அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு மொடேரா குடிசை பகுதி மக்களுக்கு அந்த இடத்தை விட்டு காலி செய்யும்படி நகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 24, 25ம் தேதிகளில் இந்தியாவில் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். வரும் 24ம் தேதி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட இடங்களை அவர் பார்வையிட உள்ளார். இதற்காக அவர் பயணிக்கும் வழிகளில் அவரை கவரும் வகையில் புதிதாக சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.