கோவை - பெங்களூரு ஈரடுக்கு ரயிலில் திடீர் தீ

சேலம்:  கோவையில் இருந்து பெங்களூருக்கு வாரத்திற்கு 6 நாட்கள், உதய் ஈரடுக்கு எக்ஸ்பிரஸ்  இயக்கப்பட்டு வருகிறது. சேலம் வழியே செல்லும் இந்த ரயில், நேற்று காலை 8மணிக்கு 5வது பிளாட்பாரத்தில் நுழைந்தது. அப்போது டி-5 பெட்டியின் சக்கரங்களில் இருந்து தீப்பொறிகள் பறந்தன. கரும்புகையும் வெளியேறியது. இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அலறினர்.  பிரேக் பெயிலியர் பிரச்னையால், ஆக்ஸில் ஆயில் தீப்பிடித்தது. இதனால் உடனடியாக ரயிலை, லோகோ பைலட் நிறுத்தினார். பிளாட்பாரத்தில் ரயில் நின்றதும், அந்த பெட்டியில் இருந்த பயணிகள் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதை சரிசெய்தனர். காலை 9.40 மணிக்கு பெங்களூருக்கு அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.

Related Stories: