45 வயது பெண்ணுடன் 30 வயது வாலிபர் தொடர்பு அதிகாலையில் தனிமையில் இருந்த மனைவி, காதலன் வெட்டிக்கொலை: போலீசில் கணவர் சரண்

ஓட்டப்பிடாரம்:  தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையை அடுத்த புங்கவர்நத்தத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (58), இவரது முதல் மனைவிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர் இறந்ததையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த  மாரியம்மாள் (45) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.   அதேபகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (30), இவர் பஞ்சாயத்து பகுதிகளுக்கு குடிநீர் திறந்து விடும் பணியும், மற்ற நேரங்களில் தாரை தப்பட்டை வாசிக்கும் தொழிலும் செய்து வந்தார். சண்முகத்தின் வீட்டிற்கு எதிரே புதிதாக ராமமூர்த்தி வீடு  கட்டி வந்துள்ளார். இதனால் அடிக்கடி அங்கு வந்த அவருக்கும், மாரியம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதையறிந்த சண்முகம் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் தொடர்பு நீடித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் முன் அறையில் பேச்சு சத்தம் கேட்டு சண்முகம் எழுந்து சென்று பார்த்த போது  ராமமூர்த்தியும் மாரியம்மாளும் தனிமையில் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சண்முகம்  அரிவாளால் ராமமூர்த்தியை வெட்டினார். இதில் அவரது தலை துண்டானது. தடுத்த மாரியம்மாளையும் சரமாரியாக வெட்டியதில் அவரது  ஒரு கை துண்டானது. கழுத்திலும் வெட்டு விழுந்தது. இதில் இருவரும் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தனர். பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் சண்முகம் பசுவந்தனை போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories: