உமர் அப்துல்லா விவகாரம்: ஜம்மு காஷ்மீர் அரசு பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது, அப்போது வீட்டு காவலில் வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா மீது சமீபத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

இதை எதிர்த்து உமர் அப்துல்லாவின் தங்கை சாரா  ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.  அதில், ‘எனது சகோதரர் உமர் அப்துல்லா,எம்பி.யாக நாட்டுக்காக பணியாற்றியவர். இவரால் ஜம்மு காஷ்மீருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது,’ என கூறியுள்ளார். இதை மூத்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு  நேற்று விசாரித்தது. பின்னர், இந்த மனுவுக்கு மார்ச் 2ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி  ஜம்மு அரசுக்கு உத்தரவிட்டது.

Related Stories: