கோவை அருகே ஊராட்சியில் குப்பை கொட்டினால் ரூ.ஆயிரம் அபராதம் காட்டி கொடுத்தால் ரூ.500 பரிசு

சூலூர்: கோவை அடுத்த சூலூர் அருகேயுள்ள முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சியில் குப்பை  கொட்டினால் ரூ.ஆயிரம் அபராதமும், குப்பை கொட்டுபவரை படம் பிடித்து  காட்டினால் ரூ.500 பரிசும் வழங்கப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை அடுத்த சூலூர் அருகேயுள்ள முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சியின் முக்கிய பகுதியில் அப்பகுதி மக்கள்  குப்பையை கொட்டி அசுத்தம் ஏற்படுத்தி வந்தனர். ஊராட்சி ஊழியர்கள் மக்களிடம், பல முறை குப்பை கொட்டக்கூடாது, என்று அறிவுறுத்தியும் குப்பை கொட்டுபவர்கள் கண்டு கண்டுகொள்வதில்லை. அதைத் தொடர்ந்து இந்து கடவுள்களின்  படத்துடன் அப்பகுதியில் ஊராட்சி சார்பில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில், ஊராட்சியின் அறிவிப்பை மீறி குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் எனவும், குப்பை கொட்டும் நபர்களை படம் பிடித்து கொடுத்தால் 500 ரூபாய் சன்மானம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வையும், பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: