முத்துப்பேட்டையில் சம்பா சாகுபடி அறுவடை வயலில் வைக்கோலை சேகரித்து கட்டும் பணியில் விவசாயிகள் மும்முரம்

முத்துப்பேட்டை: திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் சம்பா நெல் அறுவடை தொடங்கி பரவலாக நடந்து வருகிறது. சுமார்14ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல் பிரதேசத்தில் முற்றிய நெல்மணிக்கதிர்கள் தற்போது மிஷின்களின் உதவியோடு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தாமத நடவினால் பச்சை கதிர்களுடன் உள்ள வயல்களில் அறுவடை தாமதமாகிறது. ஓரிரு வாரத்திற்கு பிறகுதான் பச்சைக்கதிர்வயல்களில் அறுவடையை தொடங்க முடியும். மேலும் இடையில் பெய்த மழை மற்றும் காற்று சதியால் பெரும்பாலான வயல்களில் கதிர;கள் சகதி படுக்கையில் கிடக்கின்றன. வெயிலில் பயிரும் நிலமும் காய்ந்தால் தான் வயலில் மிஷினை இறக்க முடியும். சில காய்ந்த இடங்களில் இரவில் பனிபொழிவு நேரத்தில் அதிர்அடித்தால் சேதாரம் ஆகாமல் அதிகளவில் நெல் காணும் என்று இரவிலும் பல இடங்களில் கதிர்அடிக்கப்பட்டு வருகிறது.

கோவிலூர்ஆலங்காடு, உப்பூர்கோபாலசமுத்திரம், தில்லைவிளாகம், இடும்பாவனம், சங்கேந்தி எடையூர், பாண்டி, குன்னலூர்ஆகிய பகுதி அறுவடையான வயல்களில் சிதறிகிடக்கும் வைக்கோலை பேலர்மிஷின் வாயிலாக சேகரித்து உருட்டி சிறு கட்டுகளாக்கும் பணியில் விவசாயிகள் மற்றும் வெளி மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கடந்தாண்டில் வைக்கோல் விலை உயர;ந்து சில பகுதிகளில் தட்டுப்பாடும் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் போதிய விலை கிடைக்காமலும் வைக்கோல் தேங்கியது. இதையடுத்து விவசாயிகள் தங்கள் தேவைக்கு போக மீதமுள்ள வைக்கோலை கட்டுகளாக உருட்டி வியாபாரிகளிடம் கிடைத்த விலைக்கு தள்ளி விட தொடங்கியுள்ளனர்.வயலில் அறுவடையான நெல்மூட்டைகள் உள்ளுர்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் நிலையில் வைக்கோல் கட்டுகள் லாரிகளில் ஏற்றப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு பயணமாகி வருகின்றன. உள்ளூர்மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் பலரும் முத்துப்பேட்டை பகுதிகளில் முகாமிட்டு வைக்கோல் மொத்த கொள்முதலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: