கோடைகாலம் நெருங்குவதால் அமராவதியில் தண்ணீர் எடுப்பதை வரையறை செய்ய வேண்டும்: பொதுநல ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கரூர்: கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் தனியார் அமைப்புகள் அமராவதி ஆற்றில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பதை வரையறை செய்ய வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் பெரியாண்டாங்கோயில் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் சில தனியார் அமைப்புகள் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கப்பட்டு லாரிகளில் கொண்டு சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இதில், பல்வேறு பிரச்னைகள் அவ்வப்போது ஏற்பட்ட காரணத்தினாலும், வரும் கோடைக்காலங்களில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டும், தண்ணீர் எடுக்கப்படுவததை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரையறை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: