ஐரோப்பிய நாடுகளைப் புரட்டிப் போட்ட சியாரா புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

அயர்லாந்து:  ஐரோப்பிய நாடுகளில் வீசி வரும் சியாரா புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சியாரா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலின் காரணமாக வடக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ரயில்கள் மற்றும் விமானங்கள் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

புயல் காரணமாக, கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள்  கடலுக்கு செல்ல தடை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோரப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காற்றின் வேகம் காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன்கள் முற்றிலும் உடைந்து நொறுங்கி விழுந்தன. தொடர்ந்து கடுமையான வேகத்துடன் காற்று வீசி வருவதால்,  மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Related Stories: